LATEST NEWS
திடீரென உயர்த்தப்பட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதாவின் சம்பளம்… ஏன் தெரியுமா?…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாக்கிக் கொண்டுள்ளது. கூட்டு குடும்பம், குடும்ப ஒற்றுமை, குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள், விட்டுக் கொடுத்தல் என பல விஷயங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காட்டி வருகிறது.
இல்லத்தரசிகளின் மிக விருப்பமான சீரியல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. தற்பொழுது இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் புது வீடு கட்டி அதில் குடிபுகுந்துள்ளனர். இதிலும் பல பிரச்சனைகளும், சண்டைகளும் நடந்து சுபத்தில் முடிந்தது. இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் வருபவர் நடிகை சுஜிதா. இவர் தனம் என்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்.
நல்ல அண்ணியாக, ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து தனது குடும்பத்தை கவனித்து வருகிறார் தனம். இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலமான நடிகை ஆவார். சிறுவயதிலிருந்தே வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை சுஜிதா. இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சுஜிதாவிற்கு மட்டும் அண்மையில் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காரணம் அவர் சமீபத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக கூற, அவர் வெளியேறினால் கதை நன்றாக இருக்காது, அவரது கதாபாத்திரத்தில் வேறொரு வந்தால் எப்படி என யோசித்த தயாரிப்பு குழு அவரை சமாதானப்படுத்தி சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.