வீட்டுக்குள்ள தென்னை மரமா?… இது கொஞ்சம் புதுசா இருக்கே!… ‘ஒன்னு இல்லங்க மொத்தம் 6 இருக்கு’ ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மன்சூர் அலிகான்… - Cinefeeds
Connect with us

CINEMA

வீட்டுக்குள்ள தென்னை மரமா?… இது கொஞ்சம் புதுசா இருக்கே!… ‘ஒன்னு இல்லங்க மொத்தம் 6 இருக்கு’ ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மன்சூர் அலிகான்…

Published

on

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் மன்சூர் அலிகான். விஜயகாந்த் நடிப்பில் உருவான கேப்டன் திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. வில்லனாக மட்டுமல்லாமல் கேரக்டர் ரோல்களிலும், காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார்.

இவர் படம் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது கருத்துள்ள மற்றும் சில வேடிக்கையான வீடியோக்களையும் இவர் இணையத்தில் பகிர்வது வழக்கம். சட்டமன்றத் தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு படுத்து தோல்வி அடைந்தார். அதன் பிறகு சினிமாவில் மீண்டும் நடித்து வருகிறார். தற்போது இவர் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் மன்சூர் அலி கானுக்கு ஒரு மகளும் உள்ளார்.இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மன்சூர் அலிகான். இதுதவிர சந்தானுத்துடன் கிக் என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சென்று அவரது ஹோம் டூர் வீடியோ ஒன்றை எடுத்தது. அதில் இடம்பெற்ற ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அவரது வீட்டுக்குள் 6 தென்னை மரங்கள் இருந்தது தான். இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.