CINEMA
புதிதாக சொகுசு கார் வாங்கிய பஹத் பாசில்… விலையை கேட்டா சும்மா அசந்து போயிடுவீங்க…

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் மாமன்னன். இத்திரைப்படம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பொதுவாக படத்தில் ஹீரோ கதாபாத்திரம் தான் ரசிகர்களால் கொண்டாடப்படும்.
ஆனால் இத்திரைப்படத்திலோ வில்லனாக நடித்த நடிகர் பஹத் பாசிலின் ரத்னவேல் கதாபாத்திரம் சமூகவலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் பகத் பாசில் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு அறிமுகமானார். அதுவும் அவரது தந்தை பாசில் இயக்கிய கையேதும் தூரத் என்கிற படம் மூலம் அறிமுகமானார்.
அப்படம் தோல்வியை தழுவியதும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் பகத். இவரெல்லாம் நடிகரா என கேலி செய்தவர்களும் உண்டு. இதனால் சினிமாவை விட்டு விலகிய பகத், 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் கேரளா காஃபே என்கிற படம் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து 2011-ம் ஆண்டு பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த சப்பா குரிஷு என்கிற திரில்லர் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
அப்படத்திற்காக அவருக்கு கேரள அரசின் மாநில விருதும் கிடைத்தது. அழகாக இருந்தால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்கிற மாய பிம்பத்தை தகர்த்தெறிந்தவர் பகத். இவர் உயரமாகவோ, ஹேண்ட்சம் ஆகவோ இல்லாவிட்டாலும் இவரின் நடிப்புத் திறமையால் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
தமிழிலும் நான்கு தரமான படங்களில் நடித்திருக்கிறார் பகத் பாசில், அவர் முதன்முதலில் கோலிவுட்டில் நடித்த திரைப்படம் வேலைக்காரன். அப்படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசில், பின்னர் தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் அமர் என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்.
நடிகர் பகத் பாசிலுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நடிப்பிலும் ஆர்வம் காட்டி வரும் ஃபஹத் பாசில் தற்போது புதிய சொகுசு காரை ஒன்றை வாங்கியுள்ளார். மனைவி நஸ்ரியாவுடன் அண்மையில் தனது 9வது வருட திருமணநாளை கொண்டாடிய நிலையில் அவர் இந்த காரை வாங்கியதாக கூறப்படுகிறது.
லேண்ட் ரோவர் நிறுவனத்தில் டிபெண்டெர் மாடல் காரைத் தான் தற்போது ஃபஹத் வாங்கியுள்ளாராம். கேரளாவில் இதன் ஆன் ரோடு விலை சுமார் 3 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பில் ஆர்வம் கொண்ட ஃபஹத், அதற்கு இணையாக கார்களை வாங்குவதிலும் ஆர்வம் கொண்டவர். இவர் பலவிதமான சொகுசு கார்களை தன் வீட்டில் வாங்கி குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.