பக்தியில் திளைத்த ராக்கி பாய் … மனைவி மற்றும் குழந்தைகளுடன் வரலக்ஷ்மி பூஜை செய்த புகைப்படங்கள்… வைரல் … - cinefeeds
Connect with us

LATEST NEWS

பக்தியில் திளைத்த ராக்கி பாய் … மனைவி மற்றும் குழந்தைகளுடன் வரலக்ஷ்மி பூஜை செய்த புகைப்படங்கள்… வைரல் …

Published

on

பிரபல கன்னட நடிகரான யாஷ் தற்பொழுது இந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இவரை அந்த அளவிற்கு உயர்த்தியது 2018 இல் வெளியான கேஜிஎப் சாப்டர் 1 திரைப்படம் தான். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் இவர் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

குறிப்பாக இத்திரைப்படம் உலகம் எங்கும் 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கன்னட சினிமாவின் பிரபல நடிகரான யாஷின் உண்மையான பெயர் நவீன் குமார்.

Advertisement

இவர் நடிப்பின் மீது கொண்ட தீராத ஆர்வம் காரணமாக காரணமாக 12-ம் வகுப்பு முடித்த கையோடு 300 ரூபாயுடன் பெங்களூருக்கு வந்து சேர்ந்தார்.

தொடர்ந்து பல டிராமாக்களில் நடித்த இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட இவர் 2007 இல் ஜம்படா ஹுடுகி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார்.

Advertisement

இவரது திரை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படம் ‘மோகினி மனசு’. இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இதைத் தொடர்ந்து ராக்கி, கல்லற சந்தே, கோகுலா, மோடலசாலா, ராஜதானி என்ற படமும், களவாணி படத்தின் ரீமேக்கான கிரட்டகா, சுந்தரபாண்டியன் ரீமேக்கான   ‘ராஜாஹூளி’ , ‘கஜகேசரி’, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ராமாச்சாரி’, ‘மாஸ்டர் பீஸ்’, சந்து  ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டு’, ‘கே.ஜி.எஃப்’, கே.ஜி.எஃப் 2 என அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது யாஷ் பிரசாந்த் நீள் இயக்கத்தில் கேஜிஎப்3 பாகத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இவர் 2016ல் ராதிகா பண்டிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் யாஷ் மற்றும் ராதிகா பண்டிட் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் யாஷின் மனைவி ராதிகா. இவர் தற்பொழுது தனது குடும்பத்தோடு வரலக்ஷ்மி பூஜை செய்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in