மகன் , மருமகள் ,பேரன்களுடன் நடிகர் ராமராஜன்… இதுவரை நீங்கள் பார்த்திடாத புகைப்படம்… - Cinefeeds
Connect with us

CINEMA

மகன் , மருமகள் ,பேரன்களுடன் நடிகர் ராமராஜன்… இதுவரை நீங்கள் பார்த்திடாத புகைப்படம்…

Published

on

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர்  ராமராஜன். இவர் நடிப்பில் வெளிவந்த ‘கரகாட்டக்காரன்’ படம் தற்போது டிவியில் ஒளிபரப்பினாலும் பார்ப்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். இந்த படம் வந்து முப்பது வருடங்களுக்கும் மேல் ஆகிறது. மிகப்பெரிய அளவில் வசூலை குவித்தது அந்த படம்.

ஹீரோவாகும் முன்பு ராமராஜன் பல படங்ளை இயக்கியுள்ளார். மதுரை மேலூரில் இருந்து சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த அவர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ என்ற படம் மூலமாக இயக்குனர் ஆனார்.அதன் பிறகு பல படங்களை இயக்கினார்.

அதன்பின் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார் அவர்.அந்த படம் வெற்றி பெற்றதால் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வளர்ந்தார். நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துசெய்துகொண்டார் .

அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இறுதியாக 2012ல் வெளிவந்த ‘மேதை’ எனும் படத்தில் நடித்திருந்த ராமராஜன், அதன்பிறகு மீண்டும் தற்போது ஹீரோவாக ‘சாமானியன்’ படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது நடிகர் ராமராஜன் தனது மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…