LATEST NEWS
ரஜினியின் “தலைவர் 170” படத்தில் மிரட்டல் வில்லனாக களமிறங்கும் பிரபல நடிகர்.. ரசிகர்களுக்கு செம குஷியான அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பியதும் ஜெய்லர் திரைப்பட வெற்றி விழாவை கொண்டாட உள்ளார்.
அதன் பிறகு ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. மேலும் தலைவர் 170 படத்துக்கு அனிருத் இசை அமைக்க உள்ள நிலையில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மலையாள நடிகை மஞ்சு வாரியார், பகத் பாஸில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்திற்கு இயக்குனர் ஞானவேல் வேட்டையன் என்று பெயர் வைத்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. ஆனால் இது தொடர்பாக தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. குறிப்பாக இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக மலையாள நடிகரான பகத் பாசில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.