தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் விவேக். இவர் தனது நகைச்சுவை மூலமாக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

actor vivek family photos 11

தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றி வந்த இவர் மெட்ராஸ் ஹியூமர் கிளப் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பல பாராட்டுகளைப் பெற்றார்.

actor vivek family photos 11

அதன் மூலமாக இவருக்கு கே பாலச்சந்திரன் இயக்கத்தில் மன உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

actor vivek family photos 10

அதன் மூலமாக திரையுலகில் காமெடியனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து காதல் மன்னன், குஷி, தூள், ரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

actor vivek family photos 09

இவர் பெரும்பாலும் கதாநாயகன் அவர்களின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். எல்லா கதாபாத்திரத்திலும் மிகவும் சிறப்பாக நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

actor vivek family photos 08

அது மட்டும் இல்லாமல் அன்னியன், சிவாஜி போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து தனக்கென ஒரு முத்திரையை கொடுத்தது.

actor vivek family photos 07

2009 ஆம் ஆண்டு விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சிறந்த காமெடியன் என்ற தமிழக அரசின் விருது ஐந்து முறை வழங்கப்பட்டுள்ளது.

actor vivek family photos 06

இதைத் தொடர்ந்து மூன்று ஃபிலிம் சார் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் ஏபிஜே அப்துல் கலாம் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

actor vivek family photos 05

இவரின் சிரிப்பும், சிந்தனை கலந்த நகைச்சுவையும் மக்கள் மத்தியில் எப்போதும் பிரபலம் நடிகர் விவேக் அருண் செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

actor vivek family photos 04

இவர்களுக்கு தேஜசுவின், பிரசன்னா குமார் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

actor vivek family photos 03

பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு ரசிகர்களால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

actor vivek family photos 02

இவர் குடும்பத்தை பெரும்பாலாக மீடியாக்களில் காட்டியதே கிடையாது. இவரின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ…

actor vivek family photos 01