நைட் Light-ல் சூப்பரா இருக்கீங்க.. மாடர்ன் ட்ரெஸ்ஸில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ‘லவ் டுடே’ பட நடிகை.. ரீசண்ட் கிளிக்ஸ்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

நைட் Light-ல் சூப்பரா இருக்கீங்க.. மாடர்ன் ட்ரெஸ்ஸில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ‘லவ் டுடே’ பட நடிகை.. ரீசண்ட் கிளிக்ஸ்…

Published

on

மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை இவானா. இவர் பாலா இயக்கத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ‘லவ் டுடே’ படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்பொழுது உள்ள இளைய சமுதாயத்தில் காதலில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை இப்படம் காட்டியது. காதல் ஜோடிகள் செல்போனை மாற்றிக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டியது.

Advertisement

இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறி உள்ளார் நடிகை இவானா. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் டுடே திரைப்படம், கிட்டத்தட்ட ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலை வாரி குவித்தது. ஹீரோயினாக நடித்த முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட் ஆனதும் இவானாவின் மார்க்கெட் எகிறி உள்ளது. தற்போது இவர் கள்வன், எல்ஜிஎம், காம்ப்ளக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை இவானா. இவர் தற்பொழுது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார்.  அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement