உன்ன ரொம்ப மிஸ் பண்றன்… சீக்கிரம் வீட்டுக்கு வா… 17 வருட பந்தம்.. நடிகர் அருண் விஜய் மனைவி வெளியிட்ட உருக்கமன பதிவு.. - Cinefeeds
Connect with us

CINEMA

உன்ன ரொம்ப மிஸ் பண்றன்… சீக்கிரம் வீட்டுக்கு வா… 17 வருட பந்தம்.. நடிகர் அருண் விஜய் மனைவி வெளியிட்ட உருக்கமன பதிவு..

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக 1995ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய்.

இதைத்தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், துள்ளி திரிந்த வானம், கண்ணால் பேசவா, முத்தம், இயற்கை, தவம், வேதா என்று எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 2012ல் தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தல அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக வில்லனாக அவதாரம் எடுத்தார்.

இந்த படம் அவருக்கு ஒரு நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்தது. இதை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாகோ போன்ற மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார் அருண் விஜய். தற்பொழுது இவர் வணங்கான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

நடிகர் அருண் விஜய் ஆர்த்தி என்பவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது புர்வீ என்ற ஒரு மகளும், அர்ணவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் அருண்விஜயின் மனைவி ஆர்த்தி. இவர் தற்பொழுது ’17 வருடங்கள் கடந்து விட்டது என கூறி Engagemnet anniversary – கு  கணவருக்கு வாழ்த்து கூறி பதிவு வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by a.a (@aarathi_arun)