LATEST NEWS
‘கல்யாண சமையல் சாதம்’ பட நடிகை லேகா வாஷிங்டன் இப்ப எப்படி உள்ளளார் தெரியுமா?… வெளியான சமீபத்திய புகைப்படங்கள்…
இயக்குனர் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கல்யாண சமையல் சாதம்’. இப்படத்தில் பிரசன்னா, லேகா வாஷிங்டன், டெல்லி கணேஷ், உமா, நீலு, நடராஜன் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை லேகா வாஷிங்டன். இவர் தந்தை கென்னத் வாஷிங்டன் தாய் கீதா கோர்படே வாஷிங்டன்.


இவர் சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் பள்ளி படிப்பை முடித்தார்.அதன் பிறகு சென்னை உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நுண்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு எஸ் எஸ் மியூசிக்கில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றினார்.
அதன் பிறகு நடிகை லேகா வாஷிங்டன் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘காதல்’ திரைப்படத்தில் ஒரு பாடலில் தோன்றினார். இவர் தமிழில் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், வேதம், அரிமா நம்பி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி ,ஆங்கிலம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு வெளியான ரங்கூன் என்ற படத்திற்கு பாடல் ஆசிரியராக பணியாற்றினார்.
இவர் ‘அஜ்ஜி’ என்ற தயாரிப்பு வடிவமைப்பு நிறுவனத்தை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். நடிகை லேகா வாஷிங்டன் இம்ரான் கான் என்பருவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளவர்.தற்போது இவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
