VIDEOS
கமல் பட நடிகை பூஜா குமாருக்கு இவ்வளவு பெரிய மகளா?… மகளுடன் நீச்சல் குளத்தில் விளையாடும் அழகிய வீடியோ..!!
தமிழ் சினிமாவில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் பூஜா குமார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் பல ஆங்கில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.
அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்த இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு உலகநாயகன் கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் மற்றும் மீன் குழம்பும் மண்பானையும் என கமல்ஹாசன் நடித்த பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.
இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு பூஜா குமார் விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவா இருக்கும் பூஜா குமார் தற்போது தனது மகளுடன் நீச்சல் குளத்தில் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
