LATEST NEWS
மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீ தேவியின் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…
70 s களில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
1969 ஆம் ஆண்டு ‘துணைவன்’ என்ற படத்தின் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகினார்.
இப்படத்தில் முருகன் வேடமிட்டு நடித்து ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். இதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
1976 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘மூன்று முடிச்சு’படத்தில் கதாநாயகியாக புது அவதாரம் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து இவர் பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படத்தில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இதைத்தொடர்ந்த 1982 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘மூன்றாம் பிறை’ படத்தில் நடிகையாக நடித்தார்.
இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ,இந்தி என பல மொழிகளின் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி பிரபல முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமலுடன் தமிழ் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கான முத்திரையை பதித்தார்.
இதை தொடர்ந்து பாலிவுட் படங்கள் நடிப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வந்தார். 1980களில் இந்தி படங்களின் நடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவர் ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா. மிதுன் சக்கரவர்த்தி ,அமிதாப்பச்சன் ,ரிஷி கபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் ,என பிரபல பாலிவுட் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை கொண்டவர்.
நடிகை ஸ்ரீதேவி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூர் என்பவரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
தமிழ் நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தில் சிறந்த நடிகைக்கான அரசு விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம் பேர் விருதையும் வென்றுள்ளார்.
இவர் 300 படங்கள் நடித்துள்ளார். இவரின் கலைத்துறை பணிக்காக 2013 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது .
இவர் 2018 ஆம் ஆண்டு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
