LATEST NEWS
‘காவாலா’ பாடலுக்கு வேற லெவலில் டான்ஸ் ஆடிய நடிகை வித்யுலேகா ராமன்… தமன்னாவையே ஓரங்கட்டிடாங்களே…

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை வித்யூ ராமன். இவர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடித்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ், தெலுங்குமொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து வீரம், ஜில்லா, ப.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன் காமெடி நடிகர்களான சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார். பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இவர் ஃபிட்னெஸ் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான சஞ்சய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பிரபலங்களும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினர்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை வித்யுலேகா ராமன். இவர் தற்பொழுது ட்ரெண்டிங்கான தமன்னாவின் காவாலா பாடலுக்கு அசத்தல் நடனமாடி இணையத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram