தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்தான் நடிகை ஷாலினி.என் அம்மு குட்டி அம்மாவின் க்யூட் குழந்தையாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் முதலாக ஹீரோயினியாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிரியாத வரம் வேண்டும். பின்னர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஷாலினி சினிமாவை ஓரம் கட்டினார்.
தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஷாலினியை போலவே அவரின் தங்கை ஷாமிலியும் ஒரு நடிகை தான். இந்நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து உடையில் அம்மா ஷாலினியுடன் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை fc அணியின் ட்விட்டர் கணக்கில் இந்த பதிவை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
மெரினா அரீனாவில் அலைபாயுதே 😉💙#AllInForChennaiyin pic.twitter.com/Cja4Uw2uIH
— Chennaiyin F.C. (@ChennaiyinFC) February 24, 2023