LATEST NEWS
பகீர்..! என்னையே போட்டுத்தள்ள பார்த்தாங்க… அவங்க யார் தெரியுமா..? பரபரப்பை கிளப்பிய அமைச்சர் விஸ்வநாதன்..!!
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியவுடன் தன்னையே போட்டுத்தள்ள முயன்றார்கள் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பின் போது, ‘கரூரிலேயே விஜய்யை முடித்திருக்கணும்’ என்று திமுக கவுன்சிலர் பேசியது குறித்த கேள்வி அமைச்சரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், மேலூர் சட்டமன்றத் தொகுதியில் தான் வெற்றி பெற்றவுடன், மதுரையில் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தலைக் கொண்டுவரலாமா என்று சிலர் பேசியதாகக் குறிப்பிட்டார்.
மேலும், நேரம் வரும்போது தன்னைத் தீர்த்துக்கட்ட முயன்ற அந்த நபர்களின் பெயர்களைச் பகிரங்கமாகச் சொல்வேன் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் ஆவேசமாகத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பலத்தில்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்றும், மக்கள் வரிப்பணத்தை திமுகவினர் கொள்ளையடித்ததாகவும் அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
