“அமைச்சரே பதில் சொல்லுங்க..!” ரூ.5 கோடி லஞ்சப் புகார்.. கல்வி அமைச்சரை ரவுண்டு கட்டிய நயினார் நாகேந்திரன்.. அதிர்ந்தது அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அமைச்சரே பதில் சொல்லுங்க..!” ரூ.5 கோடி லஞ்சப் புகார்.. கல்வி அமைச்சரை ரவுண்டு கட்டிய நயினார் நாகேந்திரன்.. அதிர்ந்தது அரசியல் களம்..!!

Published

on

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகக் கல்வி அமைச்சர் ராஜ்மோகனை நோக்கி ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகக் காரசாரமான அடுக்கடுக்கான வினாக்களை எழுப்பியுள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி வரை லஞ்சம் தரத் தயாராக இருந்த நபரை அடையாளம் காட்டுவதிலோ அல்லது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்வதிலோ தமிழக அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களைப் பதிவு செய்ய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரத்யேக தொலைபேசி எண்ணிற்கு, அமைச்சரே ஏன் ரகசியமாகப் புகார் அளித்திருக்கக் கூடாது என்றும், அதை விடுத்து லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காகக் காப்பாற்றுகிறார் என்றும் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமைச்சர் மீது சாடல்களைத் தொடர்ந்த நயினார் நாகேந்திரன், கல்வி அமைச்சருக்கு லஞ்சம் கொடுப்பதற்காகத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இருக்கும் லயோலா மணியை எதற்காக இடைத்தரகராக அணுகுகிறார்கள் என்றும், அவர் மூலமாகத்தான் பணப் பரிவர்த்தனைகள் நடக்கிறதா என்றும் பகிரங்கமாகக் கேட்டுள்ளார். ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று முதலமைச்சரே பொது மேடைகளில் தொடர்ந்து கூறி வரும் வேளையில், கோடிக்கணக்கில் அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க ஒருவர் துணிகிறார் என்றால், அமைச்சர்கள் மட்டத்தில் முறைகேடுகள் சர்வ சாதாரணமாகத் தான் நடந்து கொண்டிருக்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். ஒருவேளை அரசுடன் பேரம் படியாததால் தான் அமைச்சர் இன்று பொதுவெளியில் வந்து இப்படிப் புலம்புகிறாரோ என்று கேள்வி எழுப்பி, “பதில் சொல்லுங்கள் அமைச்சரே” எனத் தனது எக்ஸ் பக்கங்களில் சவால் விடுத்துள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in