” 20 நாளா பசி, பட்டினியோட தான் இருக்கோம்.. ஆனா சமூக வலைதளத்துல இப்படி பேசுறாங்க..!” கண்ணீருடன் உடைந்த செஞ்சி சிறுமியின் தாய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

” 20 நாளா பசி, பட்டினியோட தான் இருக்கோம்.. ஆனா சமூக வலைதளத்துல இப்படி பேசுறாங்க..!” கண்ணீருடன் உடைந்த செஞ்சி சிறுமியின் தாய்..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்த வடிவேல்-பவானி தம்பதியரின் 7 வயது மகள் கடந்த 12-ந் தேதி அதிகாலை மாயமானார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கீதா தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மாயமாகі பல நாட்களாகியும் இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை என்றாலும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சிறுமியின் தாய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தங்களுக்கு ஆதரவாக ஊடகங்களும் பொதுமக்களும் குரல் கொடுத்து வருவதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களும் வதந்திகளும் தனக்கு மிகுந்த மன உளைச்சலையும் உளவியல் ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும், தன் வீட்டில் எந்தவொரு திருட்டும் நடக்கவில்லை என்றும், நகை அல்லது பணத்தை திருடுவது நோக்கமல்லாமல் குழந்தையை தூக்கிச் செல்வதே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Advertisement

சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனது குழந்தையை தொடர்ந்து தேடி வருவதாகவும், குழந்தையை கண்டுபிடிக்காமல் போக மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்திருப்பதாகவும் சிறுமியின் தாய் கூறினார். தனது மகளை எப்படியாவது மீட்டுத் தருமாறு தமிழக முதலமைச்சருக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in