“பேரம் படியலையா.. அதுனாலதான் புலம்புறீங்களா அமைச்சரே..?” கல்வி அமைச்சரை வச்சு செஞ்ச நயினார் நாகேந்திரன்..! பரபரப்பில் தமிழக அரசியல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பேரம் படியலையா.. அதுனாலதான் புலம்புறீங்களா அமைச்சரே..?” கல்வி அமைச்சரை வச்சு செஞ்ச நயினார் நாகேந்திரன்..! பரபரப்பில் தமிழக அரசியல்..!!

Published

on

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி வரை லஞ்சம் தரத் தயாராக இருந்த நபரை அடையாளம் காட்டுவதிலோ அல்லது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்வதிலோ அரசுக்கு என்ன சிக்கல் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களைப் பதிவு செய்ய அரசு அறிமுகப்படுத்திய பிரத்யேக தொலைபேசி எண்ணில் ‘anonymous’ ஆக புகார் அளித்திருக்கலாமே என்றும், அரசு அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அமைச்சருக்கு லஞ்சம் கொடுப்பதற்கு தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணியை எதற்காக அணுகுகிறார்கள் என்றும், அவரைப் பிடித்தால் தான் அமைச்சரை நெருங்க முடியும் என்ற சொல்லப்படாத விதி ஏதேனும் இருக்கிறதா அல்லது அவர் மூலமாகத் தான் பணப் பரிவர்த்தனைகள் நடக்கிறதா என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ‘ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காதீர்கள்’ என்று முதல்வர் பொது மேடையில் கூறிய பிறகும், கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்க முயல்கிறார்கள் என்றால் அமைச்சர்கள் மட்டத்தில் முறைகேடுகள் சர்வ சாதாரணமாக நடப்பதாகவே அர்த்தம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Advertisement

இறுதியாக, ஒருவேளை பேரம் படியாததால் தான் இன்று பொதுவெளியில் வந்து இப்படி புலம்புகிறீர்களோ என்றும் இதற்கு அமைச்சரே பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ‘மொட்டைக் கடுதாசி’ போல மேடையில் பேசுவது கல்வி அமைச்சர் ராஜ்மோகனுக்கு அழகல்ல என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in