LATEST NEWS
“வேற யாரையாச்சும் ஏமாத்துப்பா..! பொய்யான காரணம் சொல்லி மாட்டிக்கொண்ட IT ஊழியர்… ஒரே ஒரு வீடியோவால் உடைந்த ‘பிஃபா ஃபைனல்’ மாஸ்டர் பிளான்..!!”
பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண்பதற்காக, ஒரு ஊழியர் ‘குடும்ப விழா’ என்று பொய்யான காரணம் கூறி ஒரு மாதத்திற்கு முன்பே திங்கட்கிழமைக்கான விடுமுறையை தனது மேலாளரிடம் ஒப்புதல் பெற்றுள்ளார். மேலும், அந்த ஊழியர் கடந்த ஒரு மாதமாகவே தாமதமாக அலுவலகத்திற்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். மேலாளர் கேட்டபோது, போக்குவரத்து நெரிசல் தான் காரணம் என்று பொய்யான சாக்குகளைக் கூறி தப்பித்து வந்தார்.
ஆனால், அந்த ஊழியர் நள்ளிரவில் கால்பந்து போட்டிகளைப் பார்ப்பதால்தான் காலையில் தாமதமாக வருகிறார் என்பதை சக மேலாளர் ஒருவர் நகைச்சுவையாகக் சுட்டிக்காட்டினார். இதனால் சந்தேகமடைந்த முதன்மை மேலாளர், ஊழியரின் வருகைப்பதிவு மற்றும் விடுமுறைகளை எடுத்து, முக்கிய அணிகள் மோதிய போட்டிகளின் அட்டவணையோடு ஒப்பிட்டுப் பார்த்தார். அதில், முக்கிய போட்டிகள் நடந்த நாட்களிலேயே ஊழியர் விடுமுறை எடுத்ததும், தாமதமாக வந்ததும் உறுதியானது.
https://www.instagram.com/reel/Da5GEeSJlT9/?utm_source=ig_web_button_share_sheet
இறுதியில், இன்ஸ்டாகிராமில் மேலாளர் பார்த்த ஒரு வைரல் ரீல் ஊழியரின் பொய்யை முற்றிலும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. பிஃபா இறுதிப்போட்டி காரணமாக ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை திங்கள்கிழமை விடுமுறை அறிவித்த வீடியோவைக் கண்ட மேலாளர், ஊழியரின் விடுமுறையை உடனடியாக ரத்து செய்தார். அத்துடன், குடும்ப விழா என்பதற்கான ரயில் டிக்கெட் அல்லது திருமணப் அழைப்பிதழைக் காட்டுமாறு மேலாளர் கேட்க, அது இல்லாததால் ஊழியர் மாட்டிக்கொண்டார். அந்த வைரல் ரீலின் லிங்கை அனுப்பி “வேறு யாரையாவது ஏமாற்றுங்கள்” எனக் கூறி, திங்கள் காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வருமாறு மேலாளர் உத்தரவிட்டார்.
