LATEST NEWS
மீண்டும் சர்ச்சை… முதல்வர் விஜய்யை கட்டிவச்சி…. பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்..!!!
தூத்துக்குடியில் சக கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கான பயணம் மேற்கொள்ளவுள்ளது குறித்துப் பேசியுள்ளார். அப்போது, விஜய் கர்நாடகாவுக்குச் சென்று இறங்குவதற்கு ஹெலிகேப்டரில் செல்வதாகவும், சாலை மார்க்கமாகச் சென்றால் அவரைப் பிடித்துக் கட்டிவைத்து விடுவார்கள் போல என்றும் நகைச்சுவை மற்றும் கிண்டலான தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நிறுத்திவிடாமல், நாட்டின் ஒரு முதலமைச்சரை ஒருமையில் அவர் பேசிய விதம் தற்போது சர்ச்சையை விசிறிவிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, அரசியல் களத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் கடுமையாக எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர்.
