விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்.. வெளியான புகைப்படங்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்.. வெளியான புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Advertisement

அவரைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனிடையே விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி,  மழை பிடிக்காத மனிதன் ஆகிய  திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

Advertisement

அதில் பல திரைப்படங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கும் ரத்தம் என்ற திரைப்படத்தில் விஜய் ஆண்டனி தற்போது நடித்து வருகிறார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.

Advertisement

இதனிடையே விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்கள் இருவருமே பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மீரா நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல தூங்கச் சென்றுள்ளார்.

அதிகாலை 3 மணி அளவில் ஏதோ சத்தம் கேட்க அவரின் அழைத்துச் சென்று பார்த்த விஜய் ஆண்டனி மகள் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து பதறிப் போனார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து மகளை மீட்டு அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மீரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தனது மகளின் மறைவால் மனமுடைந்து போன விஜய் ஆண்டனிக்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். மீராவின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்று இதுவரை சரியாக தெரியவில்லை.

Advertisement

அதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக மீரா தற்கொலை செய்து கொண்ட அறையில் தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில் செல்போனை பறிமுதல் செய்து அதனை சோதித்து வருகிறார்கள்.

மேலும் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த ஓராண்டாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

அதாவது மீரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக ஓராண்டாக அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மீராவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் அவருக்கு எதனால் மன அழுத்தம் ஏற்பட்டது என்பது குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Advertisement

மேலும் அவருடன் படித்த பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகளின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in