தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அப்படி தற்போது டாப் லிஸ்டில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்தான் கயல். இந்த சீரியலில் ராஜா ராணி சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகின்றார்.

இதில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி இதற்கு முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது சன் டிவி கயல் சீரியலில் இவர் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது புடவையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Chaitra Reddy இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@princes_chaitrareddy)