LATEST NEWS
“நவம்பர் 12 வரை..” ஓடி ஒளிந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி. அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாகத் தனியார் பள்ளிகள் சங்கம் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும் திமுக பிரமுகருமான பி.டி. அரசகுமார் உட்படப் பலருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதே லஞ்ச மோசடி வழக்கில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டுத் தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரின் முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, அவர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்ததை அடுத்து, அவருக்கு வரும் நவம்பர் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிறையில் அவருக்கு முதல் வகுப்பு சிறை மற்றும் மருத்துவ வசதிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்த ரூ.100 கோடி ஊழல் வழக்கின் பின்னணியை முழுமையாக விசாரிக்க முத்துக்குமாரைக் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
