குடும்பத்துடன் ஜாலியாக சுற்றுலா சென்ற இயக்குனர் ஷங்கர்…. இணையத்தில் வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பத்துடன் ஜாலியாக சுற்றுலா சென்ற இயக்குனர் ஷங்கர்…. இணையத்தில் வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பலம் வருபவர் சங்கர். இவர் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இவரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே தொழில்நுட்ப நுண்ணறிவு, பிரம்மாண்டம் மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு கொண்ட படங்களாகவே அமைந்துள்ளன. இவர் முதன் முதலாக 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன. இதுவரை 13 திரைப்படங்களை சங்கர் இயக்கியுள்ளார். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக பல தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்து மக்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகின்றார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இவரின் மகள் அதிதி சமீபத்தில் வெளியான விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்நிலையில் அதிதி தனது instagram பக்கத்தில் குடும்பத்துடன் சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் நகருக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் இயக்குனர் சங்கர், அவரின் மனைவி ஈஸ்வரி மற்றும் மகன் அர்ஜுத் ஆகியோர் உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aditi Shankar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aditishankarofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in