LATEST NEWS
உடல் எடை குறைத்து…. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகர் நிவின் பாலி…. வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் நிவின்பாலி. இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மக்களின் ஆசை நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான நேரம் மற்றும் பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
தற்போது இவரின் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் மலையாளத்தில் வெளியாக உள்ளது. இவ்வாறு படங்களில் பிசியாக இருந்து வந்த நிவின் பாலி கொரோனா காலகட்டத்தில் உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார். இந்நிலையில் தற்போது இவர் 25 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
