தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிந்து மேனன்.இவர் முதன் முதலில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் மற்றும் ஜெயராமுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 2021 ஆம் ஆண்டு வெளியான சமுத்திரம் என்ற திரைப்படத்தில் முரளிக்கு ஜோடியாக சிந்து மைனர் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான யூத் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. 2009 ஆம் ஆண்டு வெளியான ஈரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆதி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு டொமினிக் பிரபு என்ற லண்டனை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் பிறந்தனர். அதனால் சினிமாவில் இருந்து விலகினார்.

இவருக்கு சமீபத்தில் மூன்றாவதாக ஒரு குழந்தையும் பிறந்தது. தற்போது இவர் லண்டனில் செட்டில் ஆகியுள்ளார்.இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அவ்வகையில் தற்போது அவரின் குடும்ப புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் ஈரம் பட நடிகையா இது குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்களே என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sindhu Menon இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sindhu_menon17)