‘டூயட்’ பட நடிகை மீனாக்‌ஷி சேஷாத்ரி இப்ப எப்படி உள்ளார் தெரியுமா?… வைரலாகும் புகைப்படம் . - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘டூயட்’ பட நடிகை மீனாக்‌ஷி சேஷாத்ரி இப்ப எப்படி உள்ளார் தெரியுமா?… வைரலாகும் புகைப்படம் .

Published

on

இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் ராஜம் பாலசந்தர் தயாரிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளியான படம் ‘டூயட்’ இப்படத்தில் பிரபு ,ரமேஷ் ,அரவிந்த் ,மீனாக்‌ஷி சேஷாத்ரி, பிரகாஷ் ராஜ், செந்தில் ,சார்லி, மயில்சாமி ,யுவராணி , போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு பாடல் எழுதியவர் கவிஞர் வைரமுத்து.இப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

இது ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றவர் நடிகை மீனாக்‌ஷி சேஷாத்ரி.இவர் ஜார்க்கண்ட் பூர்விகமாகக் கொண்டவர்.1983 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான படம் “பெயிண்டர் பாபு”  இப்படத்தின்  மூலமாக சினிமாவில் அறிமுகமானர்.

Advertisement

இந்த படத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார் .80s களில் மிகவும் அதிகமாக சம்பளம் வாங்கக்கூடிய நடிகைகளின்  ஒருவராக இருந்தார்.பாலிவுட்டில் அமிதாப் பச்சன், அணில் கபூர் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து  நடித்துள்ளார்.இவர் தமிழ்,  ஹிந்தி,தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஹீரோ,ஹோசியர், பேவாஃபை,மேரி ஜங்,சுவாதி,டாகேட்,இனாம் தஸ் ஹசார், ஷாகென்ஷா,மஹாதேவ், ஜர்ம்,காயல்,டாமினி போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை  மட்டுமல்ல ஒரு சிறந்த பாரம்பரிய நடன கலைஞரும் கூட.இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக் , ஒடிசி  போன்ற  நடனம் ஆடுவதில் வல்லவர்.

Advertisement

நடிகை மீனாக்‌ஷி சேஷாத்ரி மைசூரைச் சேர்ந்த வங்கி முதலீட்டாளர் ஹரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார்.இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

தற்போது அமெரிக்கா நியூ யார்க் நகரில் தனது குடுபத்துடன் வசித்து வருகிறார். இவர் அங்கு ஒரு நடன கலை கற்றுத் தரும் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.இவரின் புகைப்படமானது  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in