வித்தியாசமான உடையில் ரசிகர்களை மயக்கும் நடிகை நவ்யா நாயர்…. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்…!!! - Cinefeeds
Connect with us

CINEMA

வித்தியாசமான உடையில் ரசிகர்களை மயக்கும் நடிகை நவ்யா நாயர்…. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்…!!!

Published

on

மலையாளத்து பைங்கிளியான நவ்யா நாயர் கடந்த 2001 ஆம் ஆண்டு இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாள திரை உலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதாவது பிரசன்னா நடிப்பில் வெளியான அழகிய தீயே திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

அதன் பிறகு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம் மற்றும் ராமன் தேடிய சீதை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போது சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரை உலகில் இருந்து முழுமையாக விலகினார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

தற்போது இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத் திரை உலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி ஜானகி ஜானே என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் வித்தியாசமான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.