photographer கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் யார் தெரியுமா??… – cinefeeds
Connect with us

LATEST NEWS

photographer கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் யார் தெரியுமா??…

Published

on

தமிழ் சினிமாவில்  பல நடிகர்கள் பல கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதில் ஒன்றான photographer கலைஞராக நடித்த நடிகர்களை பற்றி இதில் காண்போம்.

1.கமலஹாசன்:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாரதிராஜா இவர் இயக்கத்தில் வெளியான படம் ‘டிக் டிக் டிக்’ இப்படத்தில் ஹீரோவாக  நடித்தவர் நடிகர் கமலஹாசன்.  இப்படமானது ஒரு புகைப்படக் கலைஞரின் கதையை கூறும் வகையில் அமைந்துள்ளது. இதுவே தமிழ் திரைப்படத்தின் புகைப்பட கலைஞர்களைப் பற்றி எடுத்த முதல் திரைப்படம் ஆகும்.

2.விஜய் சேதுபதி:

Advertisement

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான படம் ’96 ‘.இப்படமானாது  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது  . ராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகர் சேதுபதி இப்படத்தில் ராம் ஒரு போட்டோகிராபராக  நடித்துள்ளார்.இவர் தனது லென்ஸ் மூலம் சமூகங்களை ஆராய்வதற்காக நாடு முழுவதும் சுற்றி வருகிறார்.

3.தனுஷ்:

Advertisement

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான படம் ‘மயக்கம் என்ன’ இப்படமானது இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார்.ஒரு ஆர்வமுள்ள  ஒரு wildlife photographer கலைஞரின் கதையையும், அவர் காதலையும் நட்பையும் கடந்து செல்லும் போது அவர் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களையும் பற்றி இப்படத்தில் கூறப்படுகிறது.

4.விஷ்ணு விஷால்:

Advertisement

பிரபல இயக்குனர் ராம்குமாரின் வெற்றி படமான ‘முண்டாசுப்பட்டி’ காளி வெங்கட் ஜோடியாக விஷ்ணு விஷால், நகைச்சுவையான புகைப்படக் கலைஞர் கோபியாக நடிக்கிறார்.  1980 களில் கோபி புகைப்படம் எடுப்பது ஆபத்தானது என்று ஒரு விசித்திரமான மூடநம்பிக்கை கொண்ட ஒரு கிராமத்தில் நடைபெறும் சுவாரசியமான கதைகளை பற்றி இப்படத்தில் கூறப்படுகிறது

5.ஜீவா:

Advertisement

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான படம் ‘கோ’ இப்படத்தில் அஸ்வின் என்ற கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.நகரத்தில் உள்ள ஒரு நாளிதழில் பணிபுரியும் டைனமிக் புகைப்படக் கலைஞராக ஜீவா நடிக்கிறார். இத்திரைப்படம் ஒரு புகைப்பட பத்திரிக்கையாளரின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை பின்தொடரும் படமாக  எடுக்கப்பட்டுள்ளது.

6.உதயநிதி ஸ்டாலின்:

Advertisement

2018 ஆம் ஆண்டு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் ‘நிமிர்.’டிஜிட்டல் புகைப்பட ஸ்டுடியோவை நடத்தும் சிறிய நேர புகைப்படக் கலைஞராக நடிக்கிறார். ‘மகேஷிண்டே பதிகாரம்’ படத்தின் ரீமேக்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in