விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்ப கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் கோபி கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. வில்லன் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது பாக்கியலட்சுமி கோபி தான்.

இதில் கோபியாக நடித்து வருபவரின் நிஜ பெயர் சதீஷ். அவருடைய எதார்த்தமான நடிப்பால் நிஜ வாழ்க்கையில் நடப்பது போல ரசிகர்கள் கோபியை தினந்தோறும் திட்டி வருகிறார்கள்.

அவரின் சொந்த ஊர் சென்னை. இவர் 1990 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகின்றார். இவர் மின்சார பூவே என்ற திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்க தொடங்கினார்.

அதன் பிறகு பல படங்களில் இவர் நடித்துள்ளார். ராமானுஜம் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதில் குடும்பி உடன் இவரின் கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எம்ஜிஆர் ஆக மேக்கப் போட்டு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அந்தத் திரைப்படமே இவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சின்னத்திரைக்கு வந்து கிட்டத்தட்ட 21 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் இவர் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாக இருப்பதால் பலரின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

சூலம், கல்யாணப்பரிசு 2, ஆனந்தம், திருமதி செல்வம், வம்சம்,அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் மற்றும் குலதெய்வம் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

இருந்தாலும் இவருக்கு அதிக பெயரை பெற்று தந்தது பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரம்தான்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் பிரபல மலையாள நடிகை கீதா விஜயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவரின் மனைவியும் 150-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் மலையாள தொடர்களில் நடித்து வருகின்றார்.

ஐந்து வயதிலேயே தனது பெற்றோரை இழந்த கோபிக்கு ஆதரவாக இருந்தது அவரின் அத்தை மட்டும் தான். இது குறித்து அவரே பல நிகழ்ச்சிகளில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.