LATEST NEWS
ஜெயிலர் படம் பற்றி ஒத்த வார்த்தையில் ஸ்வீட் போட்டு.. ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரள வைத்த கூகுள் நிறுவனம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
திரைப்படத்தில் போலீஸ் மகன், குறும்புக்கார பேரன் மற்றும் ஓய்வு காலம் என கடைசி கால வாழ்க்கையை வஞ்சையோடு வாழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினி. இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் ஜெயிலர் திரைப்படம் பற்றி ட்விட்டரில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளது. அந்தப் பதிவில் அண்ணாத்த படம் வெளியான தேதியை குறிப்பிட்டு தலைவரு நிரந்தரம் என பதிவிட்டுள்ள நிலையில் தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
👑 Thalaivaru nerandharam 👑
The wait finally ends today with #Jailer 😍 pic.twitter.com/tWELZJ4h78
— Google India (@GoogleIndia) August 10, 2023