விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர்தான் மாகாபா ஆனந்த். 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் தான் முடித்தார்.

அதன் பிறகு பிபிஓ கம்பெனியில் வேலை செய்து வந்த இவர் அங்கு வேலை பார்த்து வந்த சுஸினா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

மாகாபா ஆனந்த் ஆர் ஜே, விஜே,திரைப்பட நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவர் முதன் முதலில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

அதன் பிறகு ரேடியோ மிர்ச்சியில் ஆறு வருடங்கள் பணியாற்றினார்.

பத்து வருடங்கள் ஆர்.ஜேவாக இருந்து தான் விஜய் டிவியில் ஆங்கர் ஆனார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமாக்காரன் காபி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் என்ற திரைப்படத்திலும் நடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து இவன் நடித்த பல படங்களில் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

தற்போதும் படங்களில் நடித்துக் கொண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். இந்நிலையில் மா காபாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.