“15 வருட காதல், இன்னும் தொடரும்”…. சினேகா – பிரசன்னாவின் காதலர் தின க்யூட் புகைப்படங்கள் இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“15 வருட காதல், இன்னும் தொடரும்”…. சினேகா – பிரசன்னாவின் காதலர் தின க்யூட் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா.

இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள்.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

Advertisement

இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான பிரசன்னா மற்றும் சினேகா ஜோடி தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது 15 வருட ஒற்றுமை, இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது எனக் கூறி சினேகா காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

அதனைப் போலவே பிரசன்னாவும், சினேகா என்னுடையவர் மட்டுமல்ல, அவர் என் வீடு, என் இதயம், என் ஆன்மா,என் கூட மற்றும் அனைத்தும் அவர்தான் என தெரிவித்து காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் இருவருமே காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in