இரவோடு இரவாக தூக்கப்பட்ட 27 மாவட்ட அதிகாரிகள்.. 2,000 சட்டவிரோத குவாரிகளின் பகீர் பின்னணி.. அமைச்சர் பிரபுவின் அதிரடி ஆக்ஷன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இரவோடு இரவாக தூக்கப்பட்ட 27 மாவட்ட அதிகாரிகள்.. 2,000 சட்டவிரோத குவாரிகளின் பகீர் பின்னணி.. அமைச்சர் பிரபுவின் அதிரடி ஆக்ஷன்..!!

Published

on

தமிழ்நாடு முழுவதும் முறையான உரிமம் பெற்றுச் செயல்படும் கருங்கல் மற்றும் கல்குவாரிகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை சுமார் 1,845 ஆகும். ஆனால், இந்த எண்ணிக்கையையும் தாண்டி மாநிலம் முழுவதும் 2,000க்கும் அதிகமான குவாரிகள் எவ்வித முறையான அனுமதியுமின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கனிமவளத் துறை அமைச்சர் பிரபுவின் நேரடி உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில் இந்த மாபெரும் முறைகேடு மற்றும் கனிமவளக் கொள்ளை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு முழுமையாகத் தெரிந்தே இவ்வளவு பெரிய அளவில் சட்டவிரோதக் குவாரிகள் இயங்கி வந்தது தற்போதைய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, முறைகேடுகளுக்குத் துணைபோன மற்றும் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 27 மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத் துறை அதிகாரிகள் அனைவரும் அதிரடியாகப் பணியிட மாற்றம் (Transfer) செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கனிமவளத் துறை வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in