LATEST NEWS
காசு கொடுத்து புக் பண்ணது ஒரு குத்தமா..? “லக்னோ ஸ்டேஷனுக்கு வாடி பாத்துக்கறேன்..!” இரயிலில் இளைஞர்களை மிரட்டி அராஜகம் செய்த முதியவர்.. பதறவைக்கும் வீடியோ..!!
ஒரு குழு நண்பர்கள் மகிழ்ச்சியாக மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இரயில் பயணம், எதிர்பாராதவிதமாக அவர்களுக்கு மிகுந்த மனஅழுத்தத்தையும் கசப்பான அனுபவத்தையும் தரும் நிகழ்வாக மாறியுள்ளது. அந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்ட நபரின் கூற்றுப்படி, அவர்கள் இரயில் எண் 11109, ‘D1’ பெட்டியில் மூன்று இருக்கைகளை முன்பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் செலுத்தியிருந்தனர். ஆனால், பயணத்தின்போது வயதான முதியவர் ஒருவர் அவர்களிடம் வந்து, தான் அமருவதற்காக அவர்களில் ஒருவர் நகர்ந்து வழிவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். அவர்கள் தாங்கள் முழு கட்டணமும் செலுத்தி முன்பதிவு செய்துள்ளதாக மரியாதையுடன் கூறிய போதிலும், அந்த முதியவர் அதைக் ஏற்றுக்கொள்ளாமல் கோபமடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
What was supposed to be a fun train journey turned into a stressful experience for a group of friends
According to the person who shared the incident they had booked and paid for three seats in Train No 11109 Coach D1 During the journey, an elderly man reportedly approached them… pic.twitter.com/2k1jblLKfy— Aradhya (@ItsAradhya__) July 30, 2026
அந்த முதியவர் அவர்களை அச்சுறுத்தும் வகையில், “லக்னோ இரயில் நிலையத்திற்கு வாருங்கள், அங்கு உங்களை கவனித்துக் கொள்கிறேன்” என்று மிரட்டியதுடன், தான் இரயில்வே ஊழியர் என்றும் உரிமை கோரியதாகக் கூறப்படுகிறது. தாங்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைழிக்கச் சென்ற இடத்தில், இதுபோன்ற அச்சுறுத்தலையும் தேவையற்ற வாக்குவாதத்தையும் சந்தித்தது அந்தப் பயணிகளை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியது. இரயில் பயணங்களின் போது இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால், பதற்றமடையாமல் அமைதி காப்பதும், வாக்குவாதத்தைப் பெரிதாக்காமல் இருப்பதுமே நல்லது. மேலும், எதிரிலிருப்பவர் இரயில்வே ஊழியர் என்று கூறினால் அவரது அடையாள அட்டையைச் சரிபார்ப்பதுடன், உடனடியாக பயணச்சீட்டு பரிசோதகர், இரயில்வே பாதுகாப்புப் படை அல்லது ‘Rail Madad’ செயலி மற்றும் உதவி எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிப்பதே சரியான வழிமுறையாகும்.
இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருக்கை தொடர்பான கருத்து வேறுபாடுகளை பரஸ்பர மரியாதையுடன் கையாள வேண்டும் என்றும், பயணத்தின் போது எந்தவொரு பயணியையும் மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
