தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகள் பலரும் உள்ளனர்.

அதன்படி சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அயலி திரைப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த நடிகையின் கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் அரிதான அதாவது வித்தியாசமான கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் அயலி.

தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையை ஏற்படுத்திய இந்த திரைப்படம் வசூலையும் வாரி குவித்துள்ளது.

ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை சுற்றி நடைபெறும் சமூகத்தின் மூட பழக்க வழக்கங்கள்,அதற்கு எதிராக அந்தப் பெண் நடத்தும் போராட்டம் மற்றும் பெண்களின் கல்வி ஆகியவை குறித்து மிக அருமையாக இந்த திரைப்படத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் வகையில் இந்த திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் அம்மாவாக நடித்த அசத்தியவர் தான் நடிகை அனுமோல்.

மலையாள நடிகை ஆன இவர் சூரன் மற்றும் திலகர், ஒரு நாள் இரவில் உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் அவரின் கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அயலி திரைப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த நடிகையா இவர் என்று கூறி புகைப்படங்களை வைரல் ஆக்கி வருகிறார்கள்.