திடீரென பழனிக்கு விசிட் அடித்த சமந்தா…. நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென பழனிக்கு விசிட் அடித்த சமந்தா…. நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

Advertisement

இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

அதற்காக தீவிர சிகிச்சையும் எடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

Advertisement

சில காலங்களாக சிகிச்சை பெற்று வந்த சமந்தா தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார். இந்நிலையில் பழனி மலை முருகன் கோவிலுக்கு சென்று சமந்தா நேற்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

கோவிலுக்கு சென்ற சமந்தா படிப்பாதை வழியாக சென்று முருகனை தரிசித்தார். அப்போது 600 படிக்கட்டுகளிலும் சூடம் ஏற்றி நேர்த்தி கடனை செலுத்தினார். அவருக்கு சிறப்பு பிரசாதங்களும் அங்கு வழங்கப்பட்டது.

Advertisement

சமந்தா பழனிக்கு வந்த போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் சமீப காலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும் தற்போது கடவுளின் அருள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையால் அதிலிருந்து மீண்டு வந்துள்ளதாகவும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பழனி முருகன் கோவிலுக்கு வந்ததாக சமந்தா செய்தியாளர்களிடம் கூறினார்.

Advertisement