தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் சாய் தீனா.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான தெறி, பிகில் மற்றும் மாஸ்டர், தனுஷ் நடித்த வடசென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் மற்றும் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் சமூக சேவை செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த பல மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.

இந்த செயலை பார்த்த பலரும் திரைப்படங்களில் மட்டும் தான் இவர் வில்லன் ஆனால் நிஜத்தில் என்னவோ இவர் எப்போதும் ஹீரோ தான் என பாராட்டினர்.

இவர் சமீபத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புத்த மதத்திற்கு மாறி இருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது சாய் தீனாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.