தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகுமார். இவரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் இருவருமே தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக உள்ளனர்.இவர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலை பெற்றுக் கொண்டிருக்கிறது.
தந்தையைப் போலவே இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் மாபெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. அதனைப் போலவே கார்த்திக் நடிப்பிலும் ஜப்பான் திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த இரண்டு திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அண்ணன் சூர்யா மற்றும் தம்பி கார்த்தி இருவரும் இணைந்து பள்ளி சீருடை சிறுவயதில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.