LATEST NEWS
90களில் கலக்கிய நடிகை சங்கவியின்…. க்யூட்டான புகைப்படங்கள் இதோ…..!!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை சங்கவி.
1977 ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்த இவரின் இயற்பெயர் காவியா ரமேஷ்.
இவர் தன்னுடைய 16 வயதில் அஜித் நடிப்பில் வெளியான அமராவதி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகையாக மாறினார்.
இவர் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் விஜய் உடன் இணைந்து ரசிகன், தேவா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை மற்றும் விஷ்ணு உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
1993 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை தனது கேரியரில் ஆக்டிவாக இருந்து வந்த சங்கவி கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் கோகுலத்தில் சீதை, சாவித்திரி மற்றும் கால பைரவன் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வெங்கடேஷ் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியரை இவர் திருமணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகிய இவருக்கு தனது 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சங்கவி தொடர்ந்து தனது கணவன் மட்டும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
அவ்வகையில் சங்கவியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
