தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் ஏராளம். அதில் காமெடி நடிகைகள் என்று பார்த்தால் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.

அதில் அனைவரின் நினைவுக்கும் வருவது முதலில் கோவை சரளா பெயர் தான். அவரைத் தொடர்ந்து பலரும் தற்போது காமெடி நடிகைகளாக கலக்கி கொண்டிருக்கின்றன.

அப்படி சினிமாவில் முன்னணி காமெடி நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் தேவதர்ஷினி.

இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

அதன்படி மர்மதேசம், கோலங்கள், அத்திப்பூக்கள் மற்றும் பூவிலங்கு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இவர் முதல் முதலில் கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க திரைப்படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

அதில் தனது நடிப்பை அசாத்தியமாக வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.

அதன்படி காதல் கிறுக்கன்,எனக்கு 20 உனக்கு 18 மற்றும் பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கென ரசிகர் பட்டாளம் உருவாகியது.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்த இவர் சின்னத்திரை நடிகர் சேத்தனை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

அவர் அண்மையில் வெளியான 96 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தேவதர்ஷினி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் தேவதர்ஷினியின் அன்சீன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்..