தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ரீமாசென் தன்னுடைய மகனின் பத்தாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை ரீமாசென்.
இவர் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த பகவதி மற்றும் விக்ரம் நடித்த தூள்,கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு அதிகமாக கிடைக்காத நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அவரின் மகனுக்கு இன்று பத்தாவது பிறந்த நாளை அவர் மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் மகனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படமும் சிறுவயதில் எடுக்கப்பட்ட மகனின் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க