தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் ரஜினிகாந்த்.
இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மங்களூரில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
அங்கு முகாமிட்டு ரஜினி பல்வேறு காட்சிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மகா சிவராத்திரி விழா என்பதால் நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்து பெங்களூருக்கு சென்றார்.
அங்கு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்திவரும் ஆசிரமத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் விடிய விடிய விழித்திருந்து அங்கு நடைபெற்ற பூஜைகளில் ரஜினி கலந்து கொண்டார்.
அதில் அவரின் மனைவி லதாவும் பங்கேற்றார். இருவரும் ஒன்றாக அமர்ந்து தியானம் செய்வது போன்ற பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்திய நாராயணனின் எண்பதாவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று அவரை வாழ்த்தினார்.
அவருக்கு தங்க காசுகளால் அபிஷேகம் செய்வது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரஜினி தன்னுடைய அண்ணன் மீது மிகுந்த பாசம் மற்றும் மரியாதை கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் அவரின் அண்ணன் தனது பெற்றோருக்கு இணையாக தன்னை வளர்த்ததாக அவர் பலமுறை கூறி நெகிழ்ந்துள்ளார்.
தற்போது தனது அண்ணனின் எண்பதாவது பிறந்தநாளில் ரஜினி கலந்து கொண்டு உள்ளார்.
ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கர்நாடக மாநிலத்தில் மாநில அரசின் சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ரஜினிக்கு இன்றும் உறுதுணையாக இருந்து வருகிறார்.
தற்போது அவரின் எண்பதாவது பிறந்த நாள் விழாவில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.