மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் எந்த படத்தில் நடித்துள்ளனர் தெரியுமா?…. பலருக்கும் தெரியாத தகவல் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் எந்த படத்தில் நடித்துள்ளனர் தெரியுமா?…. பலருக்கும் தெரியாத தகவல் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி நேற்று மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. தாவணி கனவுகள் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் உடன்பால் திரைப்படம் வரை தனது நடிப்பால் நகைச்சுவையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி போட்டவர்.

தீவிர சிவபக்தனான இவர் சிவபெருமானின் திருநாளான சிவராத்திரி தினத்தில் உயிரிழந்தே சிவ பக்தன் ஆகிவிட்டார்.தன்னிடம் இருக்கும் அனைத்தையும் மற்றவர்களுக்கு கொடுத்து அழகு பார்த்த மாமனிதர். வாரி வாரி வழங்குவதில் வல்லவர்.

Advertisement

இவர் நடிகராக மட்டுமல்லாமல் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

இப்படி பன்முகத் திறமை கொண்ட இவர்  கடந்த 18ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் மரண செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவரின் இறுதிச்சடங்கு ரசிகர்களின் கண்ணீர் மல்க நடந்து முடிந்தது. மயில்சாமியின் மரணத்திற்குப் பிறகு அவரின் குடும்பம் குறித்த பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

Advertisement

அதன்படி மயில்சாமிக்கு அன்பு மற்றும் யுவன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே தமிழ் சினிமா படங்களில் நடித்துள்ளனர். அதாவது மூத்த மகன் அன்பு அல்டி மற்றும் சிதம்பரம் ரயில்வே கேட் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரின் இளைய மகன் யுவன் பா ரஞ்சித் தயாரித்து வரும் தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in