LATEST NEWS
பாக்கியலட்சுமி சீரியலில் தலையில் துண்டை போட்ட கோபி…. என்னவா இருக்கும்?…. வைரலாகும் புகைப்படம்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்பத் தலைவியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கதாநாயகி சுசித்ராவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை கொண்டவர். தினம்தோறும் புதுவிதமான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
நல்ல டி ஆர் பி ரேட்டிங்கும் வந்து கொண்டிருக்கிறது. தற்போது விஜய் டிவியில் டிஆர்பி யில் நம்பர் ஒன் சீரியலாகவும் இது உள்ளது. சீரியலில் தற்போது இந்தியாவின் காதல் டிராக் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பாக்யாவின் கேட்டரிங் பிசினஸ் ட்ராக் மற்றொரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனால் தினந்தோறும் என்ன நடக்கும் என்று விறுவிறுப்பாக ரசிகர்கள் அனைவரும் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கோபி தன்னுடைய தலையில் துண்டை போட்டு பயந்து உட்கார்ந்து கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்ன ஆனது என்பது இனி வரும் எபிசோடுகளில் தான் தெரிய வரும். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் அந்த சீனை போடுங்க எனக் கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
