அடேங்கப்பா..! முதல்வர் அலுவலகத்தை மாற்ற இத்தனை கோடி செலவா..? வாயைப்பிளக்கும் நெட்டிசன்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! முதல்வர் அலுவலகத்தை மாற்ற இத்தனை கோடி செலவா..? வாயைப்பிளக்கும் நெட்டிசன்கள்..!!

Published

on

புனித ஜார்ஜ் கோட்டையின் முதன்மைப் பகுதியில் செயல்பட்டு வந்த முதலமைச்சர் விஜய்யின் அலுவலகத்தை, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றுவதற்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இடநெருக்கடியைத் தவிர்க்கவும் நவீன வசதிகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இந்த இடமாற்றத்தில், முதலமைச்சரின் புதிய அறை, செயலாளர்கள் அலுவலகம் மற்றும் நவீன கூட்ட அரங்கம் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, 10-வது தளத்தில் செயல்பட்டு வந்த பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அதிகாரிகளின் அறைகளும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சரின் அலுவலக அறையும் தலா ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in