LATEST NEWS
தவெகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை… தோப்பு வெங்கடாசலத்தின் பதவி பறிபோன பின்னணி..!!
ஈரோடு மாவட்ட திமுகவின் முக்கிய முகமாகவும் அமைச்சராகவும் விளங்கும் முத்துசாமிக்கும், தோப்பு வெங்கடாசலத்திற்கும் இடையே தொடர்ந்து உள்கட்சி மோதல்போக்கு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தீவிர உள்கட்சிப் பிரச்சினையின் காரணத்தாலேயே, நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெற முடியாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தோப்பு வெங்கடாசலம் தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாகவே தற்போது அவருடைய கட்சிப் பதவி பறிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய உள்கட்சிச் சிக்கல்களையும் பதவிப் பறிப்பையும் தொடர்ந்து, அவர் தவெகவிற்குத் தாவ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
