தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

இவருக்கு வயது 57.

நான் அவன் இல்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாமல் கடந்த 2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் தொகுதியில் சுயட்சையாக போட்டியிட்டவர்.


இப்படி பல ரசிகர்களை நடிப்பால் வெகுவாக கவர்ந்த இவர் இன்று உடல்நல குறைவால் காலமானார்.

சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.