விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில் மாகாபா மற்றும் பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை இருவரும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருவதால் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக பிரியங்கா எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் ஒரு எபிசோடில் கண்ணீர் விட்டு அழுதது பலரையும் நெகிழ வைத்துள்ளது. அதாவது போட்டியாளர் சந்திரன் பாடி முடித்ததும் தனது அம்மா பற்றி பேசியதில் பிரியங்கா கண்ணீர் விட்டு அழுது சிங்கிளாக இருக்கும் அனைத்து பெற்றோர்களையும் பாராட்டியுள்ளார்.

இதற்கு காரணம் பிரியங்காவின் அம்மாவும் ஒரு சிங்கிள் அம்மா தான். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.