LATEST NEWS
45 வயதில் இப்படியா?…. மீனாவுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட நடிகை சங்கவி…. வைரலாகும் வீடியோ….!!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை சங்கவி. 1977 ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்த இவரின் இயற்பெயர் காவியா ரமேஷ்.
இவர் தன்னுடைய 16 வயதில் அஜித் நடிப்பில் வெளியான அமராவதி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகையாக மாறினார்.
இவர் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் கோகுலத்தில் சீதை, சாவித்திரி மற்றும் கால பைரவன் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வெங்கடேஷ் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியரை இவர் திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகிய இவருக்கு தனது 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நடிகை மீனாவுடன் ரீல்ஸ் வீடியோ செய்து சங்கவி அதனை பகிர்ந்து உள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் இரண்டு நடிகைகளையும் க்யூட் என்று கூறி வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க